DFCC வங்கி, வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் பங்களாராகி அவர்களின் ஒவ்வொரு கட்டத்திற்கும் சேவைகளை அளிக்கிறது

2016-11-07

Bookmark and Share

DFCC வங்கி, வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் பங்களாராகி அவர்களின் ஒவ்வொரு கட்டத்திற்கும் சேவைகளை அளிக்கிறது  - www.elakolla.com இலங்கையின் முன்னணி அபிவிருத்தி வங்கியான DFCC வங்கி, புத்தாக்க பொருட்கள், சேவைகள் மற்றும் தெரிழினுட்பத்தின் உதவியுடன் அதன் சந்தைப்பங்கினை ஸ்திரமான வகையில் அதிகரித்து வருகின்றது.
DFCC வங்கியின் அன்றாட வர்த்தக வங்கியியல் சொத்துகள் மற்றும் லீசிங் பிரிவின் சிரேஷ்ட உப-தலைவர் ஜிலியன்; எட்வர்ட்ஸ் (Gillian Edwards) அவர்கள் DFCC வங்கியானது, அபிவிருத்தி மற்றும் வர்த்தக வங்கியியல் தொழிற்துறையில் தனித்துவமிக்க முக்கிய இடத்தினை கொண்டுள்ளது என நம்புவதுடன், இந்த அம்சமே, வங்கித்தொழிற்துறையில் பாரம்பரிய வரம்புகளை தகர்த்தெறிந்து தனித்துவமாக விளங்குவதற்கான காரணியாக விளங்குவதை நம்புகின்றார்.

வர்தன சேலறி பூஸ்டர் என்ற DFCC வங்கியின் புத்தாக்க சேவையானது, இளம் தலைமுறையினரையும், புதிதாக பணிக்கு சேர்ந்திருப்பவர்களையும் இலக்கு வைக்கின்றது.
இந்த சேவையானது, ஒருவருக்கு நேரிடக்கூடிய எதிர்பாராத உடனடி நிதித் தேவைகளுக்கு தீர்வளிக்கும் நிரந்தர மிகைப்பற்றினை அளிக்கும் தீர்வாக விளங்குகின்றது.
வழமையான சூழ்நிலைகளின் கீழ், ஒருவருக்கு அவசர பணத்தேவை நேரிடுமாயின், விண்ணப்பதாரி ஒருவர், மிகைப்பற்றுக்கான கோரிக்கையை மேற்கொள்வது மட்டுமே போதுமானது.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில், கணக்கு உரிமையாளர் தமது கணக்கிலுள்ள நிதியினை தேவையான வேளையில் மீளப்பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சேலறி பூஸ்டர் ஒன்றினை பெற்றுக்கொள்வதானது, வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்தருனரின் உறுதிப்பாட்டுடன், வருவாய் மீது பெறமுடிவதான இலகுவான வழிமுறையை கொண்டுள்ளது.
ஆகக்குறைந்த வருமான வரம்பாக இலங்கை ரூபாய் 30,000/- ஆக விளங்குவதுடன், விண்ணப்பதாரியின் மீளச்செலுத்தும் திறனின் அடிப்படையில், இரண்டு மாத சம்பளத்தின் 90% இனை மிகைப்பற்றாக பெற்றுக்கொள்ளவும் முடியும்.

வர்தன சேலறி பூஸ்டர் டெபிட் அட்டை, இ-வங்கியியல் சேவை, கடனட்டைகளுக்கான இணைப்புக்கட்டண விலக்கு, வர்;தன வேர்ச்சுவல் வேலட், கணக்கு உரிமையாளரின் விருப்பத்திற்குரிய சிறுவர் ஒருவருக்கென ஆரம்பிக்கக்கூடிய சலுகை ஜூனியர் சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட பல்வேறு பெறுமதி சேர்க்கைகளை அளிக்கின்றது.
இதற்கு மேலதிகமாக, விண்ணப்பதாரி, தனிப்பட்ட நிதிச் சேவைகளின் மீது வட்டி விலக்களிப்புகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
இதன்படி, வர்தன சந்தெல்ல வீட்டுக் கடன்களில் வருடாந்த வட்டி மீது 0.25% கழிவும், வர்தன நெனச கல்விக்கடன்கள் மீது வருடாந்த வட்டி மீது 0.5% கழிவும் பெற்றுக்கொள்ளலாம்.
இதனால் இந்த சேவையானது, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கைப்பாணியை மேம்படுத்தியவாறு, நிதிச் சுதந்திரத்தினையும் அளிக்கின்றது.

Personal Plus குடையின் கீழ் DFCC வங்கியானது தனிப்பட்ட வாடிக்கையாளர் ஒருவரின் தேவைகளை தீர்க்கும் வகையில் பல்வேறு சேவைகளை அளிக்கின்றது.
உதாரணமாக வர்த்தக தனிப்பட்ட கடன்கள் விண்ணப்பதாரியின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த நபரின் வருமானத்தின் 20 மடங்கு வரை கடனாக அளிக்கின்றது.
வர்தன சந்தெல்ல வீட்டுக் கடன்களானது, இல்லக் கொள்வனவு, கட்டுமானம் அல்லது புனரமைப்பிற்கான கடன்களை அளிக்கின்றது.
வங்கியானது, மாடிக்குடிமனைக்கான நிதியீட்டம், மேம்பாட்டு செயற்திட்டங்களுடன் பங்குடமை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கு மேலதிகமாக, வங்கியானது, வாகன மற்றும் கல்விக் கடன்கள், அடகுச் சேவை, டெபிட் மற்றும் கடனட்டைகள், கவர்ச்சிகரமான வட்டிகளுடன் கூடிய பல்வேறு வைப்புச் சேவைகளையும் அளிக்கின்றது.
Personal Plus சேவைகள் நெகிழ்வுத்தன்மை மிகுந்ததுடன், தனிப்பட்டவர்களின் தேவைக்கு ஏற்றவகையில் தனிப்பயனாக்கக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்த ஜிலியன் எட்வர்ட்ஸ் அவர்கள் ´தொழினுட்பமானது, எதிர்காலத்தில் சேவைகளுக்கான முக்கிய அம்மசமாக விளங்கும்.
தொழினுட்பம் சார்ந்த விடயங்களை ஏற்றுக்கொள்ள விரும்பும் இளம் தலைமுறையினரை இலக்கு வைத்தே, வேர்ச்சுவல் வேலட் சேவையை நாம் அளித்துள்ளோம்.
இது எங்கிருந்தாலும் வங்கிப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வழியமைத்துக்கொடுக்கின்றது.
வேர்ச்சுவல் வேலட் ஆனது, இணையம், மொபைல் அல்லது இலத்திரனியல் சாதனங்களின் வழியாக இணைய வங்கியியல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வழியமைக்;கின்றது.
எதிர்காலத்தில் சேவை வேறுபாட்டிட்கான முதன்மை விடயமாக தொழினுட்பமே விளங்கும் என்பதை நாம் நம்புகின்றோம்´ என தெரிவித்தார்.

இத்தொழிற்துறை குறித்து கருத்துரைத்த ஜிலியன் எட்வர்ட்ஸ் அவர்கள் ´வங்கித்தொழிற்துறையானது உயர் போட்டியினை கொண்டுள்ளது.
இதன் விளைவாக, மைய வங்கியியல் சேவையின் இலாப எல்லைகள் மிகுந்த அழுத்தத்தினை எதிர்நோக்குகின்றன.
வங்கிகள் தமது வர்த்தகத்தினை மேம்படுத்துவதற்கான முக்கிய சவாலாக இதுவரை செல்லாத, ஆயினும் சிறந்த சாத்தியங்;களை கொண்ட கிராமப்புறங்கள் விளங்குகின்றன.
தொழினுட்பம் நிச்சயமாக உத்வேகத்தினை அளிக்கும் எனினும் வாடிக்கையாளர் கேள்வி, அதீத புத்தாக்கம் மற்றும் சௌகர்யம் ஆகியனவே முக்கிய பின்புலமாக விளங்குகின்றன.
வங்கித்துறையில் பல்வேறு அபிவிருத்தியினை எதிர்பார்க்கும் இவ்வேளையில், வாடிக்கையாளர் சேவை மற்றும் புத்தாக்க சேவைகள் ஆகியனவற்றை இலக்கு வைத்தல் போன்றன வெற்றியினை தீர்மானிக்கும்.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தினை கொண்டுள்ள DFCC வங்கியானது, வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவினை ஏற்படுத்திக்கொண்டுள்ள அனுபவத்தினால், சிறந்த பிடிப்பினையும், எதிர்காலத்தினையும் கொண்டுள்ளது.
வெற்றிகளின் போதும் தோல்விகளின் போதும், வாடிக்கையாளர்களுடன் பங்குடமை கொள்வதான எமது நம்பிக்கை, எமக்கு விசுவாசமிகு வாடிக்கையாளர் தளம் ஒன்றினை அளித்துள்ளது என்றால் மிகையாகாது.
DFCC வங்கியானது, நிகரற்ற பெறுமானம், தனித்துவமிக்க அனுகூலங்களுடன் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு தனிப்பட்ட தேவைகளுக்கும் தடையற்ற வங்கித்தீர்வுகளை அளிப்பதற்கு தயார்நிலையில் உள்ளது.

ஜிலியன் எட்வர்ட்ஸ், தொழிற்துறை நிபுணத்துவமிகு வங்கியாளராக விளங்குவதுடன், வங்கிக் கிளை முகாமைத்துவம், தனிப்பட்ட நிதிச் சேவைகள், லீசிங் மற்றும் அன்றாட வர்த்தக வங்கியியல் உள்ளிட்ட பன்முக வங்கிச்சேவை அனுபவத்தினை கொண்டுள்ளார்.
இவர் DFCC வங்கியின் தனிப்பட்ட நிதிச்சேவைகளை கட்டமைப்பதில் முக்கிய பங்காளியாக விளங்கினார்.
இவரின் பலமாக தனிப்பட்ட வங்கிச் சேவை விளங்குகின்றது.

.


තැපැල් වර්ජනයක් ළඟ එනවලු
New Zealand wrap up Sri Lanka series with 120-run win
විරහ ගීත අසමින් කාමරයක තනිවූ යුවතියකට පහළ වූ හැඟීමක් නිසා වෙච්ච විනාශය
සිල් රෙදි නඩුව විභාගයට තීන්දුයි
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved