சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய வெற்றிக்கு வித்திட்ட 5 முக்கிய அம்சங்கள்

2017-06-17

Bookmark and Share

சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய வெற்றிக்கு வித்திட்ட 5 முக்கிய அம்சங்கள் - www.elakolla.com சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், வங்கதேச அணியை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா எளிதில் வென்றது.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் போல, அண்மைக் காலமாக இந்தியா - வங்கதேசம் இடையிலான போட்டிகள் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கிய நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், இந்தியா பெற்ற முக்கிய வெற்றியை சாத்தியமாக்கிய 5 முக்கிய காரணங்களை இங்கே காணலாம்.

முதலில் பேட் செய்த வங்கதேச அணி, ஒரு கட்டத்தில் 300 அல்லது 330 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

27.5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து மிக வலுவான நிலையில் இருந்த வங்கதேசம், பகுதி நேர சுழல் பந்துவீச்சாளரான கேதார் ஜாதவின் பந்துவீச்சை சமாளிப்பதில் திணறியது.

நன்றாக விளையாடிக் கொண்டிருந்த தமிம் இக்பால் மற்றும் முஷ்ஃபிகர் ரஹீம் ஆகிய இருவரும் ஜாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

தான் பந்துவீசிய 6 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுக்களை பெற்ற ஜாதவ், வங்கதேச அணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினர்.

இதே போல், வங்கதேச இன்னிங்சின் இறுதி கட்டங்களில் துல்லியமாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பூம்ரா, 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி அந்த அணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார்.

எளிதாக 300 ரன்கள் எடுத்திருக்க வேண்டிய வங்கதேச அணி, 264 ரன்களை மட்டும் பெற்றதற்கு, அந்த அணியின் அனுபவம் மிகுந்த ஷாகிப் அல் ஹசன் மற்றும் மகமத்துல்லா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது முக்கிய காரணமாகும்.

அணித்தலைவர் முர்தஸாவை தவிர, வங்கதேச பின்வரிசை வீரர்கள் யாரும் அதிரடி ஆட்டம் ஆடாத காரணத்தால், அந்த அணியின் ரன்குவிப்பு வெகுவாக மட்டுப்பட்டது.

மேலும், முக்கியமான தருணத்தில் தமிம் இக்பால் மற்றும் முஷ்ஃபிகர் ரஹீம் ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர்.

வங்கதேச அணியின் ஆட்டத்தை எளிதில் கணிக்க இயலாது.
மிகவும் ஆக்ரோஷமாக வங்கதேச அணி விளையாடக் கூடும் என்றெல்லாம் போட்டியின் முன்னர் கூறப்பட்டாலும், வங்கதேச அணியை விட வியூகம் வகுத்து, அதனை திறன்பட நிறைவேற்றியதில் இந்திய அணியின் பங்கு சிறப்பாக இருந்தது.

அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்ற சுழல் பந்துவீச்சாளர்களை , ஏற்கனவே பலமுறை வங்கதேச அணி வீரர்கள் சந்தித்துள்ளதால், அவர்களுக்கு பெரிதும் பரிச்சயம் இல்லாத கேதார் ஜாதவை கோலி பந்துவீச அழைத்தார்.
இது மிகவும் பலன் அளித்த வியூகமாகும்.

இதே போன்று, இறுதி கட்டங்களில் பூம்ராவை பந்துவீச செய்ததன் மூலம், அவர் தனது துல்லியமான ´யார்க்கர்´ பந்துகளால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, வங்கதேச அணியின் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினார்.

.


දැන් මහින්දට සතුටුයිද?
පාසලේ මත්පැන් පෙරූ 1ක් මාට්ටු
Paramedics on token strike from today
Investigation in temple of tooth
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved