ரவி வசம் தேசிய லொத்தர் சபையை வழங்குவது குறித்து அதிருப்தி

2017-06-19

Bookmark and Share

ரவி வசம் தேசிய லொத்தர் சபையை வழங்குவது குறித்து அதிருப்தி - www.elakolla.com சட்டத்திற்கு முரணாக தேசிய லொத்தர் சபையை வௌிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரும் வகையிலான வர்த்தமானியை வௌியிட்டமை குறித்து தாம் கவலையடைவதாக இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனல் தெரிவித்துள்ளது.

மீண்டும் நிதி அமைச்சின் கீழ் தேசிய லொத்தர் சபையை கொண்டு வரும் வகையிலான வர்த்தமானியை வௌியிட்டு ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தீர்வு காணுமாறும் அவர்கள் அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனலினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1963ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிதி சட்டமூலத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட தேசிய லொத்தர் சபை, 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது.

இதற்கமைய குறித்த சபை நிதி அமைச்சரின் கீழ் இதுவரை இயங்கி வந்தது.

இந்த நிலையில், தற்போதைய நிதி அமைச்சரான மங்கள சமரவீரவின் மேற்பார்வையின் கீழ் இந்த சபை இயங்க வேண்டும்.

எனினும், அதனை வௌிவிவகார அமைச்சரான ரவி கருணாநாயக்கவின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க, நிதி அமைச்சர் தவிர்த்து வேறு எந்த அமைச்சரின் வசமும் தேசிய லொத்தர் சபை வழங்கப்படுவது சட்டத்திற்கு முரணானது என, இந்த விடயம் குறித்து கருத்து வௌியிட்டுள்ள இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டநெசனலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேவேகர கூறியுள்ளார்.

(அத தெரண தமிழ்)

.


පට්ටිපොල සිට දුම්රියෙන් බණ්ඩාරවෙලට වතුර -VIDEO
මෙරට රැකියා වියුක්තිය 4.5% යි
Traffic limited between Balummahara and Miriswatta
මග්ගෝන අනතුරින් යතුරු පැදියේ ගිය දෙන්නෙක් මරුට
 
   
   
   
   
   
   
   
   
   
"මේ දේවල් වලින් මම සැලෙන්නේ නෑ" රෝහිත අබේගුණවර්ධන රෝහලෙන් යන ගමන් කියපු කතාව - වීඩියෝ පසුගියදා ඒකාබද්ධ විපක්ෂය විසින් සංවිධානය කර තිබූ විරෝධතාවකට සහභාගී වී සිටි අතරතුර අනතුරකින් තුවාල ලබා රෝහල් ගතකළ පාර්ලිමේන්තු මන්ත්‍රී රෝහිත අබේගුණවර්ධන අද (27) රෝහලේ සිට නිවස බලා පිටත්ව ගියා. ඒ යන අතරතුරු ඔහු මාධ්‍යට අදහස් දැක්වූ අතර එහිදී පවසා සිටියේ පොලිසියට මේ අනතුර සම්බන්ධයෙන් තමන් දොස් පවරන්නේ නැති බවයි. එමෙන්ම රෝහල් ගතකර සිටියදී සුවදුක් බැලීමට පැමිණි පක්ෂ විපක්ෂ සාමාජිකයින්ට ස්තූතිවන්ත වන බවටද රෝහිත අබේගුණවර්ධන මහතා ස්තූතිවන්න වුණු අතර එම අවස්ථාවේ වීඩියෝව පහතින්..... (under the courtesy of hirunews news web)
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved