மண்டபம் மீனவர்கள் 5 பேர் கடற்படையினரால் கைது

2017-06-19

Bookmark and Share

மண்டபம் மீனவர்கள் 5 பேர் கடற்படையினரால் கைது - www.elakolla.com தமிழக மீனவர்கள் ஐந்து பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

61 நாட்கள் மீன்பிடி தடை காலத்துக்கு பிறகு கடந்த 14-ம் திகதி இரவு மீனவர்கள் கடற்றொழிலுக்காக சென்றுள்ளனர்.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் கைது செய்யப்படுவர் என மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் கடற்படையினர் கடந்த 16-ம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தனர்.


அவர்களது எச்சரிக்கையை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், புதுக்கோட்டை மாவட் டம் கோட்டைபட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்து, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று முன்தினம் அதிகாலை மீன்பிடிக்கச் சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


இதில் சிலர் வழக்கம் போல் இந்திய கடல் எல்லையைக் கடந்து மீன்பிடித்தனர்.
அதில் ஒரு படகில் 5 மீனவர்கள் நள்ளிரவில் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது அங்கு ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அப்படகை சிறை பிடித்தனர்.


அதில் இருந்த 5 மீனவர்களையும் கைது செய்து காரை நகர் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தங்கச்சிமடம் விக்டோரியா நகரைச் சேர்ந்த அருமைநாதன் என்பவருக்குச் சொந்தமான அந்தப் படகு மண்டபம் கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளது.


குறித்த 5 மீனவர்களிடமும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

.


අමාත්‍ය දයා ගමගේට එරෙහිව කළු පටි පැළඳ ගනී
85 undocumented Sri Lankans detained in Medan
සිංහරාසා විභාගයට ගන්නේද? නැද්ද? - මහ උසාවියේ තීන්දුව පසුවට!
නෝට්ටුවල වලංගුභාවය සොයා අධිකරණ ක්‍රියාමාර්ගයක්
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved