திருகோணமலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வு

2017-08-10

Bookmark and Share

திருகோணமலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்தும் செயலமர்வு - www.elakolla.com அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பாக சிவில் சமுக அமைப்புகளை தெளிவுபடுத்துகின்ற செயலமர்வு இன்று (10) காலை 9.30 மணியளவில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக சிரேஷ்ட சட்டத்தரணியும், அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றிய பொது மக்கள் கருத்து கேட்கும் பிரதிநிதி குழுவின் தலைவருமான திரு லால் விஜநாயக மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாண பல்கலைகழக விரிவுரையாளரும் இந் நிகழ்ச்சியின் வளவாலருமான திருமதி கோசலை மதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

´இலங்கையின் அரசியல் யாப்பு தொடர்பாகவும், யாப்பின் வகைகள் தொடர்பாகவும், யாப்பின் மாற்றம், யாப்பில் உள்ளடக்கம், இலங்கையில் உருவாக்கப்பட்டு மாற்றப்பட்ட யாப்பு தொடர்பான விளக்கங்களை திருமதி.
கோசலை மதன் வழங்கினார்

இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை முன்னேற்றுவதற்கு தேவையான புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படல் வேண்டும்.
இலங்கையர் என்ற நாமத்தை முன்னிலைப்படுத்தாமல் நாம் செயற்பட்டமையினால் எமது நாடு பின் தங்கிய நிலைக்கு செல்ல காரணமாக இருந்தது.

மக்களின் உரிமைகளை பாதுகாக்க அரசியல் யாப்பு இன்றியமையாயது.
வடக்கு தெற்கு என்று பாராமல் கூடிய அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி ஒழிப்பு, ஜனநாயகம் நிலை நாட்டப்படல், மனித உரிமையை பாதுகாத்தல் ஆகிய விடயங்களுக்காகவே மக்கள் கடந்த தேர்தலில் ஆணையை வழங்கினார்கள்.


சிலர் அரசியல் இலாபத்துக்காக புதிய அரசியல் யாப்பு தயாரித்தலை குழப்பியடிக்க முயல்வதாக சிரேஷ்ட சட்டத்தரணியும்,அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றிய பொது மக்கள் கருத்து கேட்கும் பிரதிநிதி குழுவின் தலைவருமான திரு லால் விஜநாயக இதன் போது தெரிவித்தார்.

இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிவில் சமுச அமைப்பிக்களின் பிரதிநிதிகள், தலைவர்கள், இளைஞர்கள், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

(அத தெரண நிரூபர்)

.


හොර කාර් තොගයෙන් කෝටි 655 බදු වංචාවක්‌..ඉහලම තැනකින් උදවු..
තීන්දුව ලැබෙන තුරු නොසිට තීරණයක් ගන්න
හොරණ දැරියක් කෙළෙසන්න ආපු පාපතරයාව ගම්මු අල්ලගෙන ගස් බැන්දට පස්සේ දැරියගේ මව කියාදුන් අමතක නොවන පාඩම
S. Thomas’ College win 42nd Mustangs Trophy
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved