ஞாயிற்றுக்கிழமை களனிவெல மார்க்கத்தில் புகையிர போக்குவரத்து இல்லை

2017-08-11

Bookmark and Share

ஞாயிற்றுக்கிழமை களனிவெல மார்க்கத்தில் புகையிர போக்குவரத்து இல்லை - www.elakolla.com வரும் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை களனிவெலி மார்க்கத்தில் புகையிரத பஸ் தவிர எந்தவொரு புகையிரதமும் பயணிக்காது என்று புகையிரதத் திணைக்களம் கூறியுள்ளது.

புகையிரத வீதியில் மேற்கொள்ள உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார்.

இதனால் புகையிரத பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை குறைக்கும் நோக்கில் மஹரகம மற்றும் கொஸ்கம ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் வழமையாக சேவையில் ஈடுபடுகின்ற புகையிரத பஸ் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும் 14ம் திகதி திங்கட்கிழமை காலை முதல் மீண்டும் வழமை போன்று களனிவெலி மார்க்கத்திலான புகையிரதங்கள் தொடர்ந்து சேவையில் ஈடுபடும் என்று விஜய சமரசிங்க கூறினார்.

(அத தெரண தமிழ்)

.


උතුරුමැද සභා නායක හදිසියේ මියයයි
Maldives top diplomat in Lanka to mend ties
අද සිට තද වැසි
Paranagama report far worse than UN report Rajitha
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved