தமிழ் கைதிகள் விடுதலையின் தாமதத்திற்கு சட்ட மா அதிபர் திணைக்களமே காரணம்

2017-10-11

Bookmark and Share

தமிழ் கைதிகள் விடுதலையின் தாமதத்திற்கு சட்ட மா அதிபர் திணைக்களமே காரணம் - www.elakolla.com சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட அமைச்சர்,

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கைதிகளில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய கைதிகள் தவிர்ந்த ஏனையோரை உடனடியாக விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.


ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளில் நிலவும் தாமதம் காரணமாகவே தமிழ் கைதிகளின் விடுதலையிலும் தாமதம் நிலவுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் விரைவாக கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 62 சதவீதமானவை தற்போதுவரை விடுவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இங்கு கூறினார்.

.


රට පුරා වැසි
ජනපති ප්‍රධානත්වයෙන් අද සයිටම් ගැන සාකච්ඡාවක්
අගවිනිසුරුවරියව නැවත පත්කිරීම ගැන සතුටුදායකයි
Sri Lanka artists to perform in Jammu
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved