பெரியபோரதீவில் சக்கப்போர் வழங்கி வைப்பு

2017-10-12

Bookmark and Share

பெரியபோரதீவில் சக்கப்போர் வழங்கி வைப்பு - www.elakolla.com கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் பெரியபோரதீவில் மட்பாண்ட உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் சக்கப்போர் வழங்கி வழங்கும் நிகழ்வும், சுற்றுமதில் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் மட்பாண்ட நிலையத்தில் நேற்று (11) நடைபெற்றது.

மட்பாண்ட உற்பத்தி நிலைய தலைவர் எஸ்.ரதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அதிதிகளாக பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.கண்ணன், எஸ்.நித்தியானந்தன், எஸ்.மகேந்திரன், மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது கிராமிய பொருளாதார அமைச்சின் ஐந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெரியபோரதீவு மட்பாண்ட நிலைய சுற்று மதிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், மட்பாண்ட உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் முப்பத்தி ஐந்து பேருக்கு சக்கப்போர் வழங்கி வைக்கப்பட்டது.

பெரியபோரதீவில் மட்பாண்ட உற்பத்தி நிலையத்தினரால் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

.


Photo Album - Suraj presents Elements With Surya
ඉන්දීය විදේශ ලේකම් 12දා දිවයිනට!
යෝෂිතට රස්සාවත් නෑ-ඇපත් නෑ
කෝටියක් වටිනා හෙරොයින් තොගයක් වැල්ලවත්තේ දී අල්ලයි
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved