தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனித்து போட்டியிடவுள்ளதாக கஜேந்திரன் கூறுகிறார்

2017-12-06

Bookmark and Share

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனித்து போட்டியிடவுள்ளதாக கஜேந்திரன் கூறுகிறார் - www.elakolla.com தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கூறியுள்ளார்.உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் இணைந்து தேர்தல் கூட்டு ஒன்றை உருவாக்கியிருந்தது.


எனினும் பின்னர் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலை கூட்டணியையும் இணைத்து போட்டியிட ஈ.பி.ஆர்.எல்.எவ் தீர்மானித்தமையை தொடர்ந்து அந்த கூட்டு உடைந்தது.இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலை பொது அமைப்புக்களையும் இணைத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்கனவே வெளியேறியுள்ள நிலையில் தற்போது புளொட் மற்றும் ரெலோ அமைப்புக்களும் வெளியேறி புதிதாக கூட்டமைக்கப் போவதாக அறிவித்துள்ளன.


இந்தநிலையில் அவ்வாறு பல கட்சிகளும் சேர்ந்து அமைக்கவுள்ள நிலையில் அதிலாவது தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணி இணையுமா இல்லையா என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதிலும் தாம் இணையப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

(யாழ் நிருபர் பிரதீபன்)

.


කැමරන් යළි බ්‍රිතාන්‍යයේ බලය අල්ලයි
Minimum room rate of a hotel to abolished, custom duty wavers for surfing sports
බීමත් රියැදුරන්ට වැඩ වරදී
තිරප්පනේ මළ සිරුරු හඳුනා ගැනෙයි
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved