பஸ்ஸில் உதவி கோருபவர்கள் போல சென்று கொள்ளையிட்ட நபர்கள்

2017-12-07

Bookmark and Share

பஸ்ஸில் உதவி கோருபவர்கள் போல சென்று கொள்ளையிட்ட நபர்கள் - www.elakolla.com நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க நிதி சேகரிக்கும் போர்வையில், பஸ் பயணிகளின் பணப் பைகளை கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் அம்பலன்தோட்டை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரின் பணப் பை கடந்த 6ம் திகதி பகல், மாத்தறையில் இருந்து எம்பிலிபிடிய நோக்கி பயணித்த பஸ்ஸில் வைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பஸ்ஸில் உதவி கோரிய இருவர் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, குட்டிகல பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

எனவே, அவர்களது வீட்டுக்கு பொலிஸார் சென்ற வேளை, சந்தேகநபர் தப்பிச் ஓடியுள்ளார்.

மேலும், அவரது மனைவி கொள்ளையிட்ட கைப் பையை மறைக்க முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கேகாலை - யடியன்தொட பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு சிகிச்சையளிக்கவும் ஊணமுற்ற பிள்ளைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பணம் வேண்டும் எனக் கோரி, அவர்கள் பஸ்களில் நிதி சேகரித்து வருபவர்களாகும்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் தனது சகோதரனுடன் இணைந்து நீண்ட நாட்களாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அவரது வீட்டில் இருந்த மெத்தைக்கு கீழ் இருந்து நோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு சிறுவர்கள் மற்றும் நபர்களில் புகைப்படங்கள் மற்றும் வைத்திய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், ஜனாதிபதி செயலகம், விஷேட வைத்திய நிபுணர்கள் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளினால் வழங்கப்பட்ட ஆவணங்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

.


Prageeth Eknaligoda case: police arrest two suspects
" පාකිස්තානයේ සැබැ මිතුරා ශ්‍රී ලංකාවයි " ලාහෝර් ගිය අපේ ක්‍රීඩකයන්ට ඉහළ පිළිගැනීමක් , පාකිස්තානයේ විදී පුරා සිංහලෙන් බැනර් .!
14 tea pluckers hospitalised after wasp attack
වල්ලපට්ට මාට්ටු නොකර සල්ලි අරගෙන
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved