ஒலுவில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

2017-12-07

Bookmark and Share

ஒலுவில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்  - www.elakolla.com அம்பாறை மாவட்டம், ஒலுவில் கடலில் மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பிய படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இன்று (07) அதிகாலை ஒலுவில் வெளிச்ச வீட்டுப் பிரதேச கடல் பரப்பில் மீன் பிடிக்கச் சென்று கரையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில் குறித்த படகு கவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஒலுவில்-06 ஆம் பிரிவைச் சேர்ந்த அபுசாலி முகம்மது இப்றாகிம் (33) என்ற மீனவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார் எனவும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காணாமல் போன மீனவரைத் தேடும் பணியில் பொலிஸாரும் மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இவருடன் குறித்த படகில் சென்றிருந்த ஏனையோர் கரை திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

(அம்பாறை நிருபர் அஸ்லம் மௌலானா)

.


Photo Album - nathasha & prihan in kandyan style
ආබාධිත රණවිරුවන්ගේ ගැටළු පිළිබඳ තීරණාත්මක සාකච්ඡාවක් අද
Most Ven. Nauyane Ariyadhamma Thera passes away
මහරජ ගැමුණු මගේ සියලූ‍ හැකියාවන් උකහා ගත්තා - සඳුන් බණ්‌ඩාර
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved