நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல்! (படங்கள்)

2018-02-12

Bookmark and Share

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல்! (படங்கள்)  - www.elakolla.com மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடி, கடற்கரை வீதியில் உள்ள அலுவலகம் மீதே இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேரம் குறித்து வெடிக்கும் (ரைம் பொம்) குண்டு மூலமே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

குறித்த பகுதிக்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினர் மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவினர் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த குண்டு வெடித்திருந்தால் அப்பகுதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்திருக்கும் சூழ்நிலையேற்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் முடிவுற்ற நிலையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.

(மட்டக்களப்பு நிருபர் வலா கிருஷ்ணன்)

.


පොලිස්පති මානව හිමිකම් කොමිසමට කැඳවයි
භාරත ඝාතන නඩුව ආයෙමත් කල්යයි
යුරෝපා සංගමය දැඩි අර්බුදයක
Message of Christ consists of many lessons - PM
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved