உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – முழுமையான முடிவுகள்- ஒரே பார்வையில்!

2018-02-12

Bookmark and Share

உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – முழுமையான முடிவுகள்- ஒரே பார்வையில்! - www.elakolla.com ஜனவரி 30 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெற்றது.


இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகுவதில் மந்தநிலை காணப்பட்ட போதிலும் தற்போது 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 231 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளன.

முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்....

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 231 சபைகளில் வெற்றி
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 43 சபைகளில் வெற்றி
ஐக்கிய தேசிய கட்சி - 34 சபைகளில் வெற்றி
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி - 7 சபைகளில் வெற்றி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (அ.கி) - 5 சபைகளில் வெற்றி
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 4 சபைகளில் வெற்றி
சுயேட்சைக் குழு - 4 சபைகளில் வெற்றி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 சபைகளில் வெற்றி
ஈழ மக்கள் ஜநனாயக கட்சி - 2 சபைகளில் வெற்றி
தேசிய காங்கிரஸ் - 2 சபைகளில் வெற்றி
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் - 1 சபையில் வெற்றி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1 சபையில் வெற்றி
தமிழர் விடுதலை கூட்டணி - 1 சபையில் வெற்றி
தேசிய மக்கள் கட்சி - 1 சபையில் வெற்றி
எக்சத் லங்கா மகா சபா கட்சி - 1 சபையில் வெற்றி
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு - 1 சபையில் வெற்றி

.


රථ පෙළපාලිය නිසා විකල්ප මාර්ග භාවිතා කරන්න
හෙරොයින් ජාවාරමේ ගිය 1ක් පොලිස් දැලේ
නන්දිමිත්‍ර මහව දුම්රිය අංගණයේදී මැදිරි 10ක් ගෙලෙන් අදී (පිංතූර)
කැලණි ගඟේ පරිසර දූෂණ වළකන්න වැඩපිළිවෙළක්
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved