திருமண ஆசைகாட்டி இளம்பெண்களை கற்பழித்த வாலிபர் கைது!

2018-02-13

Bookmark and Share

 திருமண ஆசைகாட்டி இளம்பெண்களை கற்பழித்த வாலிபர் கைது!  - www.elakolla.com திருவனந்தபுரம் அருகே உள்ள பாலோடு பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் (வயது 36).
இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறியது.
அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ரெதீஷ் ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

இதை நம்பி அந்த பெண் அவருடன் பல்வேறு இடங்களுக்கு தனியாக சென்று உள்ளார்.
அப்போது அவரை ரெதீஷ் கற்பழித்து உள்ளார்.
இதனால் அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவரை வற்புறுத்த தொடங்கினார்.

ஆனால் அவரிடம் பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்திவந்த ரெதீஷ் பிறகு தலைமறைவாகி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் விசாரித்த போது மீண்டும் ரெதீஷ் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டது தெரிய வந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் ரெதீஷ் மீது பாலோடு போலீசில் புகார் செய்தார்.
பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ரெதீஷ் மீது பல பெண்கள் இது போல திருமண ஆசைக் காட்டி கற்பழித்ததாக புகார் கூறி இருந்தது தெரியவந்தது.

விதுரா, கடைக்கல் உள்பட பல பொலிஸ் நிலையங்களில் ரெதீஷ் மீது இதேபோல கற்பழிப்பு புகார்கள் பதிவாகி இருந்தது.
இதனால் ரெதீசை கைது செய்ய பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ள தகவல் பொலிஸாருக்கு கிடைத்தது.
உடனே பொலிஸார் ரகசியமாக கண்காணித்து ரெதீசை கைது செய்தனர்.
இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

.


ඔරු පදින්න ගිය සැරයන් ඔරුව පෙරළී මරුට
Chandimal gets ton after Herath falls
යතුරුපැදි 2ක් ගැටී 2ක් මරුට
අලුත් ග්‍රහ ලෝක 7ක් -3ක් මිනිස් වාසයට සුදුසුයි
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved