தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாற்றுத் திட்டத்தை வௌிப்படுத்த வேண்டும்

2018-02-13

Bookmark and Share

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாற்றுத் திட்டத்தை வௌிப்படுத்த வேண்டும் - www.elakolla.com மஹிந்த ராஜபக்‌ஷ தலமையிலான கட்சி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்து என்ன செய்யபோகிறது? மாற்றுத் திட்டம் என்ன? என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண்டும் என சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகள் குறித்து தீர்மானங்களை, தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைத்து தீர்மானங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கவேண்டும்.
வெறுமனே இரா.
சம்பந்தனும், எம்.
ஏ.சுமந்திரனும் வார்த்தைகளால் கூறிக்கொண்டு இருப்பதால் பயனில்லை எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று காலை யாழ்.
ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஷ் பிரேமசந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மை வரித்து கொண்டிருத்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் பலவீனப்பட்டிருக்கிறது.
இம்முறை மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளார்கள்.
முன்னர் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது.


வெருகல், பூநகரி போன்ற இடங்களை தவிர்த்து சகல இடங்களிலும் பெரும்பான்மையை இழந்துள்ளது.
இதற்கிடையில் தமழ் தேசிய கூட்டமைப்பை தாபன மயப்படுத்த வேண்டும் என நாம் பல சந்தர்பங்களில் கேட்டிருந்தபோதும் அதனை தமிழரசு கட்சி நிராகரித்தது.
இதனால் நாம் கட்சியை விட்டு வெளியேறி தனித்து இயங்கும் தீர்மானத்தை எடுத்தோம்.

மேலும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அணி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இதனால் தெற்கில் ஆட்சி மாறுமா? என்னும் அளவுக்கு நிலமைகள் மாறியிருக்கிறது.
இந்நிலையில் இப்படியான மாற்றம் வந்தால் என்ன செய்வதைன தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் திட்டம் ஒன்று இருந்திருக்க வேண்டும்.
இல்லையெனில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும்.

அதனடிப்படையில் அடுத்தகட்ட நகர்வு என்ன? என்பது தொடர்பில் தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
இதற்கு தமிழரசு கட்சியிடம் கொள்கை மற்றும் உபாய மாற்றம் வேண்டும்.
இதனை விடுத்து இரா.
சம்மந்தனும், சுமந்திரனும் வாயால் கருத்துக்களை கூறிக்கொண்டிருப்பதால் பயன் எதுவுமில்லை என்றார்.

(யாழ் நிருபர் தீபன்)

.


ප‍්‍රභාකරන් වගේ වෙන්නැයි විග්නේෂ්වරන්ගෙන් ඉල්ලයි..
සජින්ගේ අලියා උඩවලවට රැගෙන යයි
2017 will be decisive for Sri Lanka - Rajapaksa
Four ex- L.T.T.E. members arrested
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved