ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைப்பு

2018-02-16

Bookmark and Share

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைப்பு - www.elakolla.com ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ள விஷேட கலந்துரையாடலுக்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ​இதன்போது பேசப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுதவிர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அபேட்சகர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (15) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்து அபேட்சகர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

.


පොලිස් සිරමැදිරිය හාරාගෙන සැකකරුවෙක් පනී
පාවාදීමක් සිදුකළා - උසාවි යනවා
චන්දිමාල්ගෙන් ශතකයක්
මීගමුවෙන් නවසීලන්තයට යන්න හැදූ 18 ක් අල්ලයි
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved