ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதல்

2018-02-16

Bookmark and Share

ஐ.பி.எல்.<br>தொடக்க ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதல் - www.elakolla.com 8 அணிகள் பங்கேற்கும் 11 ஆவது ஐ.பி.எல்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை நேற்று (14) வெளியிடப்பட்டது.


இதன்படி ஏப்ரல் 7 ஆம் திகதி தொடங்கும் ஐ.பி.எல்.
திருவிழா மே 27 ஆம் திகதி வரை நடக்கயிருக்கிறது.
மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நடக்க உள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுவுள்ளது.

இந்த தொடரில் நேரம் மாற்றப்பட்டு மாலை 5.30 மணி மற்றும் இரவு 7 மணிகளில் ஆட்டங்கள் தொடங்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.


போட்டி நேரத்தை மாற்றுவதற்கு சில அணிகளின் உரிமையாளர்களும், ஒளிபரப்பு நிறுவனத்தாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நேரத்தை மறுபடியும் ஐ.பி.எல்.
நிர்வாகம் மாற்றியுள்ளது.
முந்தைய ஆண்டுகள் போலவே இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
ஒரே நாளில் இரண்டு ஆட்டம் இடம்பெறும் போது ஒரு ஆட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும்.

9 நகரங்களில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது.
இதில் இறுதிப்போட்டி மும்பை வான்கடே விளையாட்டரங்கில் அரங்கேறுவதும் அடங்கும்.
அதே சமயம் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் ஐ.பி.எல்.
போட்டி நடக்க உள்ளது.


சென்னையில் 7 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.
இங்கு ஏப்ரல் 10 ஆம் திகதி நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

.


වැට් බදු වංචාවේ මොළකරුවන් අත්අඩංගුවේ
කාට දොස් කිව්වත් වැඩක් නෑ මගේ පුතාට පණ දෙන්න කාටවත් බෑ - ගාල්ලේ දී දුම්රියට බිලි වු රිච්මන්ඩ් විද්‍යාලයේ පුබුදුගේ කතාව
President to consider final UPFA nominations list today
ටෝනී රණසිංහ ජීවන ගමනට සමුදෙයි
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved