சனிக்கிழமை கொழும்பில் 24 மணித்தியால நீர் வெட்டு

2018-02-16

Bookmark and Share

சனிக்கிழமை கொழும்பில் 24 மணித்தியால நீர் வெட்டு - www.elakolla.com எதிர்வரும் சனிக்கிழமை (17) கொழும்பில் பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை (17) காலை 9 மணியில் இருந்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணிவரையில் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 01, 02, 03, 04, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பபடும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு 12 மற்றும் 13 ஆகிய பிரதேசங்களில் அந்தக் காலப்பகுதியில் குறைவான அழுத்தத்துடன் நீர் விநியோகம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மாளிகாகந்தை வரையிலான பிரதான நீர் விநியோக குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்த பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

.


Opposition concerned over security to former President
අර්ධ අවසන් වටයට සුදුසුකම් ලැබූ කණ්ඩායම් මෙන්න
ශරීර ඇප දෙකයි-රු.25,000යි-වෙල්ගමට ඇප ලැබෙයි
සාක්ෂි නෑ - ඉන්දීය ධීවරයින් නිදහස්
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved