பணம் கொடுக்காததால் தாயிடமிருந்து 5 மாதமாக குழந்தையை பிரித்து வைத்த வைத்தியசாலை

2018-02-16

Bookmark and Share

பணம் கொடுக்காததால் தாயிடமிருந்து 5 மாதமாக குழந்தையை பிரித்து வைத்த வைத்தியசாலை - www.elakolla.com மத்திய ஆப்பிரிக்காவின் காபான் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி பெண் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.


இவருக்கு பிறந்த குழந்தை 35 நாட்கள் இன்குபட்டரில் வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் டிஸ்சார்ஜ் ஆகும் தினத்தில் வைத்தியசாலை கட்டணமாக ரூ.2.5 லட்சம் கட்டினால் தான் குழந்தையை தருவதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
இவ்வளவு பெரிய தொகை இல்லாததால் அந்த தாய் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த செய்தி இணையத்தில் வெளியானது.
இதையடுத்து சமூகவலைத்தள பயனாளிகள் அந்த தாய்க்காக பணம் வசூலித்து கொடுத்தனர்.
இதன்மூலம் பில் தொகை கட்டப்பட்ட பின்னர் ஒருவழியாக ஐந்து மாதங்கள் கழித்து குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐந்து மாதங்களாக தாயிடம் இருந்து குழந்தையை பிரித்து வைத்ததாக வைத்தியசாலையின் இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும் சோனியா ஓகோம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை போலிஸார் விடுதலை செய்தனர்.
இந்த சம்பவம் காபான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.


Yoshitha and 4 others further remanded
PMK opposes Centre’s largesse to Lankan fishermen
රජයෙන් විශේෂ වැඩපිළිවෙළක්
පාලකයින්ට පරිසරය ගැන හැඟිමක් නැහැ
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
Copyright © 2016 DM Technology. All Rights Reserved